Kathir News
Begin typing your search above and press return to search.

ப்ளிஸ் கொஞ்சம் டைம் வேணும்.. இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான் பிரதமர்.!

ப்ளிஸ் கொஞ்சம் டைம் வேணும்.. இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான் பிரதமர்.!

ப்ளிஸ் கொஞ்சம் டைம் வேணும்.. இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான் பிரதமர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2019 12:46 PM GMT


ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.


இந்த தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.


இந்நிலையில், புல்வாமா தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது இந்தியாவையே அதிர வைத்தது.


இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தது. ஆனால், பாகிஸ்தான் அதனை பொருட் படுத்தாமல் இருந்தது.



இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீதான இறக்குமதி வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டது.



இந்த நிலையில் ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பார்த்து அவர் ஒரு பதான் இனத்தை சேர்ந்தவராக இருந்தால் அந்த இனத்தின் பெயரை காப்பாற்றுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.


பதான் இனத்தை சேர்ந்தவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. மோடியின் இந்த பேச்சு இம்ரான் கான் சூடேற்ற அதற்கு அவர் பதிலளித்திருக்கிறார்.


இது பற்றி பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: இம்ரான் கான் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்.


புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருந்தால் அதற்கான ஆதாரங்களை கொடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News