Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் ஆதரவு - பழசு! ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் ஆதரவு - புதுசு! “துண்டை காணோம், துணியை காணோம்” என்று இருவரும் ஓட்டம்!!

ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் ஆதரவு - பழசு! ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் ஆதரவு - புதுசு! “துண்டை காணோம், துணியை காணோம்” என்று இருவரும் ஓட்டம்!!

ஸ்டாலினுக்கு பாகிஸ்தான் ஆதரவு - பழசு!  ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் ஆதரவு - புதுசு!  “துண்டை காணோம், துணியை காணோம்” என்று இருவரும் ஓட்டம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Aug 2019 5:34 PM IST



சுதந்திர தினத்தன்று திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்தார். அந்த அளவிற்கு அவருக்கு தேசபக்தி அதிகம்.


அதேபோல திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன், ரிபப்ளிக் டிவியில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை” என்று இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்.





சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் குரல்கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.


இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மோடி அரசுக்கு துணை நிற்கும்போது, திமுக, காங்கிரசின் ஒரு பிரிவினர் உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து வருகின்றன.


இந்தியாவிற்கு எதிரான திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் அறிவித்தார். கடந்த 22-ஆம் தேதி டெல்லியில் இந்த போராட்டம் நடந்தது.





இந்தியாவுக்கு எதிராக போராட்டம் அறிவித்த திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் பாகிஸ்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.


பாகிஸ்தான் ரேடியோவில் இது பற்றிய செய்தி வெளிட்டுள்ளது. பாகிஸ்தான் ரேடியோவின் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.radio.gov.pk என்ற இணையதளத்திலும் இந்தியாவுக்கு எதிரான திமுகவின் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டது. அதில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ் பாரதி ஆகிய தி்முகவின் முன்னணி தலைவர்கள் அடங்கிய படத்தையும் வெளியிட்டு, பாகிஸ்தான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது.


பாகிஸ்தானின் http://www.radio.gov.pk இணையதளத்தில் இது தொடர்பாக வெயியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் 3-வது பெரிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகம், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய மோடி அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. புதுடெல்லியில் வருகிற வியாழக்கிழமை (22-ஆம் தேதி) இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசால் வழங்கப்பட்டு வந்த தனி அந்தஸ்தை நீக்கியதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்” என்று குறிபிட்டு மகிழ்ந்தது.




https://twitter.com/RadioPakistan/status/1163714540057612289



திமுக தலைவர் ஸ்டாலினின் தேசதுரோக செயலை பலரும் மிகக்கடுமையாக கண்டித்தனர்.


இனதால் திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் அந்தர் பல்டி அடித்தார். 370 சட்டப்பிரிவு நீக்கத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்வதற்காகத்தான் இந்த போராட்டம் என்று தலை குப்புற விழுந்தார். அதோடு திமுகவின் டெல்லி போராட்டத்தில் அதன் தலைவரான ஸ்டாலினே கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.


டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்தத அந்த போராட்டத்தில், மொத்தம் 150-க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர்.


பாகிஸ்தானுக்கு ஆதவராக குரல்கொடுத்து மரண அடி வாங்கிய ஸ்டாலினைப் போன்று அவரின் கூட்டாளியான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இப்போது மண்ணை கவ்வி உள்ளார்.


சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வந்தார். இந்த விஷயத்தில், பாகிஸ்தானைவிட இந்தியாவை அதிகம் எதிர்த்தவர் ராகுல் காந்திதான்.





சமீபத்தில், ஜம்மு காஷ்மீர் சென்று வந்த பின் ராகுல்காந்தி தனது ட்விட்டரில், “ஜம்மு-காஷ்மீர் மக்கள் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டு 20 நாட்கள் ஆகின்றன. எதிர்க்கட்சி மற்றும் பத்திரிகைத் தலைவர்கள் ஸ்ரீநகருக்குச் செல்ல முயன்றபோது ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது நிர்வாகத்தால் முரட்டு சக்தி கட்டவிழ்த்துவிடப்பட்டது” என்று குற்றம் சாட்டி இருந்தார்.




https://twitter.com/RahulGandhi/status/1165590570951069696?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1165590570951069696&ref_url=https://www.dailythanthi.com/News/India/2019/08/28112728/Violence-in-Kashmir-because-of-Pakistans-instigation.vpf



ராகுல் காந்தியின் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் பாராட்டியது. அதோடு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எழுதிய கடிதத்திற்கு ஆதாரமாகவும் ராகுல் காந்தியில் கருத்தை மேற்கோள் காட்டி உள்ளது.


காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் ஆணையாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.


அதில், “ஜம்மு-காஷ்மீரில் "மக்கள் இறப்பதை" குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போன்ற முக்கிய அரசியல்வாதிகளால் அங்கு பிற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில்"அங்கே மிகவும் வன்முறை நடக்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.




https://twitter.com/ShireenMazari1/status/1166334865194831873?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1166334865194831873&ref_url=https://kathirnews.com/2019/08/28/violence-in-kashmir-because-of-pakistans-instigation/



இது இந்திய அளவில் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது. தேச துரோக காங்கிரசை மக்கள் வசை பாடினர். பாகிஸ்தானுக்கு ஆதரவான காங்கிரசின் நிலைப்பாட்டை ஒருவர்கூட ரசிக்கவில்லை.


இதனால் திமுக தலைவர் ஸ்டாலினைப் போலவே, ராகுல் காந்தியும் அந்தர் பல்டி அடித்தார்.


இது தொடர்பாக இன்று தனது டுவிட்டர் பதிவில், “பல விஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்று கொள்ள முடியாது. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில், பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம். காஷ்மீரில் பாகிஸ்தான் வன்முறையை தூண்டி வருகிறது” என்று பல்டி அடித்தார்.




https://twitter.com/RahulGandhi/status/1166556113715810304?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1166556113715810304&ref_url=https://www.dailythanthi.com/News/India/2019/08/28112728/Violence-in-Kashmir-because-of-Pakistans-instigation.vpf



இது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறந்த பாடம் என்பதைவிட, தேசத்தை நேசிக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அந்நிய நாடுகளுக்கு விஸ்வாசம் காட்டும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் நல்ல படிப்பினை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News