Kathir News
Begin typing your search above and press return to search.

தலைகால் புரியாமல் திரியும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்-காஷ்மீர் நெடுஞ்சாலையை 'ஸ்ரீநகர் நெடுஞ்சாலை' என பெயர் மாற்றம்! ஆகஸ்ட் 5ஐ கருப்பு நாளாக கொண்டாடவும் முடிவு!

தலைகால் புரியாமல் திரியும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்-காஷ்மீர் நெடுஞ்சாலையை 'ஸ்ரீநகர் நெடுஞ்சாலை' என பெயர் மாற்றம்! ஆகஸ்ட் 5ஐ கருப்பு நாளாக கொண்டாடவும் முடிவு!

தலைகால் புரியாமல் திரியும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்-காஷ்மீர் நெடுஞ்சாலையை ஸ்ரீநகர் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம்! ஆகஸ்ட் 5ஐ கருப்பு நாளாக கொண்டாடவும் முடிவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 7:39 AM GMT

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவின் படி வெளியுறவு, தகவல் தொடர்பு, ராணுவம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் தவிர மற்ற துறை சார்ந்தவர்கள் நடவடிக்கைகளை நிறைவேற்ற ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சம்மதத்துடன் மட்டுமே நிறைவேற்ற முடியும். இத்தகைய பிரிவினைவாத நடைமுறையை நீக்க இந்த 370 வது பிரிவை ரத்து செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்திய அரசானது ஒரு முடிவை எடுத்தது.

இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதன் மூலம் ஏற்கனவே உள்ள மாநிலத்தை முழுமையாக இந்திய எல்லைக்குள் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசின் இந்த முக்கியமான முடிவு அண்டை நாடான பாகிஸ்தானை காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 5-ஆம் தேதியை கருப்பு நாளாக கொண்டாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் நெடுஞ்சாலையின் பெயரை ஸ்ரீநகர் நெடுஞ்சாலை என மாற்றியமைக்க பாகிஸ்தானியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அரசும் ராணுவமும் கடந்த 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை தங்கள் நாட்டோடு இணைக்கும் கனவில் மிதந்து வருவதோடு மக்களையும் இதை வைதீது ஏமாற்றி வந்தது. ஆனால் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் தற்போது ஏமாற்றமடைந்த மக்கள் கூட்டத்தை சமாதானப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது

எனவே பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்முத் குரேஷி, "எங்கள் கவனம் ஸ்ரீநகர் மீது உள்ளது. எனவே ஆகஸ்ட் 5 முதல் காஷ்மீர் நெடுஞ்சாலையை ஸ்ரீநகர் நெடுஞ்சாலை என பெயரை மாற்றுகிறோம்.இது ஸ்ரீநகரில் உண்மையான "எங்கள் இலக்கை நோக்கிச் செல்லும் பாதையாக இருக்கும்" என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

மற்றொரு சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கையாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊடகவியலாளர்களையும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று இந்தியாவின் மிருகத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் நபர்களுடன் பேசச் செய்வோம் என்றும் குரேஷி கூறினார். உலகெங்கிலுமுள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் கொடுமைகளை தெரியப்படுத்துவார்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் தோள் கொடுத்து நிற்பார்கள் என்றும் குரேஷி கூறினார்.

பாகிஸ்தானியர்களை சமாதானப்படுத்த இந்த மாதிரி ஒன்றுக்கும் உதவாத செயல்களில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுவது இது முதல் முறை அல்ல . கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்தே காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்ப சீனாவும் பாகிஸ்தானும் முயன்றன. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரச்சனைகளை இருதரப்பு ரீதியாக தீர்துத்க கொள்ள வேண்டும் என்று கூறி அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு உறுப்பினர்கள் அந்த முயற்சியை முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


source : https://www.opindia.com/2020/07/pakistan-rename-islamabad-highway-srinagar-5-august/amp/?__twitter_impression=true

Next Story
கதிர் தொகுப்பு
Trending News