முஸ்லீம்கள் கோவிலை இடித்ததற்கு, இந்துக்களை அபராதம் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பிய பாகிஸ்தான் நீதிமன்றம்!
Pakistani Hindus Being Pressured To Pay Fines For Over 100 Muslims Who Destroyed Temple
By : Muruganandham
டிசம்பர் 2020 இல், பாகிஸ்தானில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது. இக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 1919 இல் கட்டப்பட்டது. இது 1997 இல் தாக்கப்பட்டது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, 2015 இல் புதுப்பிக்கப்பட்டது. மீண்டும் டிசம்பர் 30 அன்று கோவில் மீது தாக்குதல் நடந்தது.
முஸ்லீம்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவே கோயில் இருந்து வந்தாலும், கோயில் நிர்வாகம் வளாகத்தை விரிவுபடுத்துகிறது என்ற சந்தேகமே தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கோயிலின் பராமரிப்பாளர் குடியிருப்பதற்காக கோயிலை ஒட்டி ஒரு அறையை கட்டியிருப்பது பின்னர் தெரியவந்தது.
நவம்பர் 22வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், 11 ஆண்களுக்கு இந்து சமூகம் அபராதம் செலுத்த வேண்டும் என்று இஸ்லாம் அமைப்பு கூறியுள்ளது. ஒரு நபருக்கு 268,000 ரூபாய் அபராதம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 123 பேரும், இந்து சமூகமும் தங்களின் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று கோருகின்றனர் என்று இந்து தலைவர் செய்தித்தாளிடம் தெரிவித்தார். அவர்களுக்கு அபராதம் செலுத்த மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 26ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
கோவிலை புனரமைப்பதில் இடையூறுகளை உருவாக்கும் மதகுருக்களுக்கு அடிபணிந்து, கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உள்ளூர் நிர்வாகத் தலைவர் இந்துக்களுக்கு உதவவில்லை என்று இந்து தலைவர் கூறினார். அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 30 மில்லியன் ரூபாயை மீட்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.