Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகை திமுகவுக்கு பாராட்டு!! குஷியில் மிதக்கும் கழகத்துக்கு விரைவில் ஆபத்து!!

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகை திமுகவுக்கு பாராட்டு!! குஷியில் மிதக்கும் கழகத்துக்கு விரைவில் ஆபத்து!!

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகை திமுகவுக்கு பாராட்டு!! குஷியில் மிதக்கும் கழகத்துக்கு விரைவில் ஆபத்து!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Aug 2019 11:35 AM GMT


இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சியான திமுக அழைப்பு விடுத்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள், காஷ்மீரில் மோசமான சூழல் நிலவுவதாக கருத்து தெரிவித்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான ‛டான்' செய்தி வெளியிட்டுள்ளதுடன் திமுகவையும் வெகுவாக பாராட்டியுள்ளது கவலைக்குரிய விஷயம் என இந்திய அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்து நாடே பாராட்டுவதும் மட்டுமல்லாமல், மத்திய அரசின் பின்னால் அரசியல், மத பேதமில்லாமல் அணி வகுத்து நிற்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லிம்களில் 67 சதவீதம் பேர் அரசின் நடவடிக்கையை ஆதரித்துள்ளதாக நடுநிலை ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. தேச நலனில் அக்கறையுள்ள காங்கிரசாரில் பலரும் அரசின் நடவடிக்கையை ஆதரித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிரிவினை வாதம் பேசுபவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதாக மனப்பால் குடித்து, அவர்களை திருப்தி படுத்தினால் அவர்களின் வாக்குகளை அள்ளலாம் என கணக்குப் போட்டு திமுக காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தேசிய நலன்களுக்கு எதிராக பேசி வருகிறது.


மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசை கண்டித்து டில்லியில் திமுக சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் காங்., இடதுசாரி ,திரிணாமுல் காங்., சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்ட்டிரிய ஜனதா, தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


இது குறித்து பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளியாகும் இந்திய நலன்களுக்கு எதிரான, பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


இந்திய எதிர்க்கட்சிகளில் ஒன்றான திமுக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் காங்., ராஜ்ய சபா தலைவரான குலாம் நபிஆசாத் பேசுகையில்: காஷ்மீரில் தற்போது ஜனநாயகம் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதனை நாம் அங்கீகரிக்க தவறும் பட்சத்தில் முட்டாளாகி விடுவோம். இங்கு மிக மோசமான சூழலும் கல்லறை போன்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனை ஜம்மு காஷ்மீர் அரசு மறைக்கிறது. பத்திரிகைகள் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மையை வெளிக்கொணர வேண்டும். 370 ரத்து புறவாசல் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்திருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இவ்வாறு ஆசாத் பேசினார்.






மார்க்., கம்யூ., கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்; காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள நிலை ஜனநாயகத்திற்கு மீதான பெரும் தாக்குதல். காஷ்மீரியத், ஜம்ஹரியத், வாஜ்பாய் காலத்தில் மீறப்படவில்லை. ஆனால் தற்போது மீறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் காஷ்மீரில் அமைதி நிலவவும், ஜனநாயகத்தை நிலை நாட்டவும் காஷ்மீர் மக்கள் தங்களின் உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதற்கெல்லாம் காரணமான தமிழக மாநில கட்சியான திமுகதான் என்றும் பாராட்டி அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


:இது குறித்து இந்திய அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‛‛பயங்கரவாதிகளின் புகலிடம் என உலக நாடுகள் கருதும் பாகிஸ்தான் வரை திமுக புகழ் பரவி விட்டது. திமுகவையே தங்களுக்கு ஆதரவான கட்சியாக பாக்கிஸ்தான் நினைக்கிறது. இது இந்தியாவில் திமுகவுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என திமுகவினருக்கு புரியவில்லை. நாடு என்று வரும்போது தமிழக மக்கள் கட்சி வேறுபாடுகளை பார்க்க மாட்டார்கள் என்பது கூட திமுக தலைமைக்கு தெரியவில்லை'' என்று வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News