இந்திய தூதரகத்தின் முயற்சி - கத்தார் நாட்டில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்திய கலாச்சார விழா.!
இந்திய தூதரகத்தின் முயற்சி - கத்தார் நாட்டில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்திய கலாச்சார விழா.!
By : Kathir Webdesk
கத்தார் நாட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய கலாச்சாரத்தை கத்தார் நாட்டிலும் பிரதிபலிக்கச்செய்யும் வகையில், இந்திய தூதரகத்தின் கீழ் சமூக கலாச்சார அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கத்தார் நாட்டுக்கு சென்று வசித்து வரும் மக்களுக்காக, அவர்களின் மண் மனம் மாறாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
அந்த வகையில் கத்தார், தோகாவில் “ Palakkadan Nattarangu” என்ற சமூக பண்பாட்டு அமைப்பின் மூலம் கேரள மக்களின் பகலை நிகழ்ச்சி செப்டம்பர் 27 ஆம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் TEYSEER MOTORS நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாக மேலாளர் ஆனந்த் பசுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.