Kathir News
Begin typing your search above and press return to search.

ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது வருமானவரித்துறை அதிரடி - மார்ச் - 31தேதி வரை இறுதி கெடு

அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் இணைக்காத பான் கார்டுகள் செல்லாததாகிவிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

ஆதார் இணைக்காத பான் கார்டு செல்லாது வருமானவரித்துறை அதிரடி - மார்ச் - 31தேதி வரை இறுதி கெடு
X

KarthigaBy : Karthiga

  |  25 Dec 2022 12:15 PM GMT

வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு என்னுடன் ஆதரவை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். தற்போது இதற்கான காலக்கெடுவை வருமானவரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீஸில் வருமானவரிச் சட்டம் 1961-ன் படி விலக்குப் பெறாத அனைத்து பான் கார்டுகளும் 31- 03-2023 க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செல்லாததாகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இது கட்டாயம் அவசியம் தாமதிக்க வேண்டாம் இன்றே இணைக்கவும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருமானவரி சட்டம் 1961-ன் படி வீட்டில் இல்லாதவர்கள்,80 மற்றும் அதற்கு மேல் வயது உடையவர்கள் இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர். எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும்.


அதே நேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகிவிட்டால் வருமான வரி சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன் பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் மதிய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் செயல்படாத பான் எண்ணெய் பயன்படுத்தி வருமானவரி தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது. நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது. குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும். இவற்றைத் தவிர அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால் வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமானவரித்துறை கூறியுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News