“பஞ்சமி நிலத்தை, தி.மு.க. அறக்கட்டளை காலி செய்தால், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க நான் தயார்” – பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு!!
“பஞ்சமி நிலத்தை, தி.மு.க. அறக்கட்டளை காலி செய்தால், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க நான் தயார்” – பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு!!
By : Kathir Webdesk
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள
இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது பஞ்சமி நிலம் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி
வருகிறார். அப்படியானால் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப்பத்திரத்தை வெளியிடுங்கள்
என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பெரம்பலூரில் செய்தியாளர்களிடம்
பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள
இடம், பஞ்சமி நிலம் என்று கூறப்படுகிறது. அது பஞ்சமி நிலம் இல்லை என்றால் அதற்கான மூலப்பத்திரத்தை
திமுக வெளியிட வேண்டும். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? இல்லையா?
என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தலித் சமுதாய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த இடம் பஞ்சமி நிலமாக இருந்தால், உடனே அது அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள். அந்த நிலத்தை அரசாங்கத்திற்கு தி.மு.க திருப்பி கொடுப்பதன் மூலம் அதற்கு ஏற்படும் 5 கோடி ரூபாய் இழப்பை, நான் கொடுக்க தயாராக உள்ளேன். அந்த பஞ்சமி நிலத்தில் இருந்து தி.மு.க அறக்கட்டளை அகற்றப்படவேண்டும்
இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.