Kathir News
Begin typing your search above and press return to search.

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் ஊடுருவிய சர்ச்சைக்குரிய பெண் கனகதுர்காவுக்கு ஏற்படும் சோதனைகள் : அரசு இல்லத்தில் தஞ்சம்

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் ஊடுருவிய சர்ச்சைக்குரிய பெண் கனகதுர்காவுக்கு ஏற்படும் சோதனைகள் : அரசு இல்லத்தில் தஞ்சம்

அத்துமீறி சபரிமலை கோவிலுக்குள் ஊடுருவிய சர்ச்சைக்குரிய பெண் கனகதுர்காவுக்கு ஏற்படும் சோதனைகள் : அரசு இல்லத்தில் தஞ்சம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jan 2019 12:29 PM GMT




கடந்த 2 ஆம் தேதி அத்துமீறி ஐயப்பன் கோவிலுக்குள் 2 கம்யூனிஸ்ட் பெண்கள் நுழைந்தனர். பாரம்பரியமிக்க கோவிலுக்கு முதன்முறையாக 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவரும் சென்றதைக் கண்டித்து ஹிந்து அமைப்பினரும் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க-வினரும் களத்தில் இறங்கினர்.
மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் கம்யூனிஸ்டுகளின் கல்வீச்சு சம்பவத்தில் ஒருவர் உயிர் இழந்தார். பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும், பா.ஜ.க பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் எறிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ்.அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலுக்குள் புகுந்த 39 வயதான கனகதுர்கா என்ற பெண் மீது அவரது சொந்த ஊரில் இருந்தவர்கள் கோபமாக இருந்தனர். அவர் ஊருக்குள் நுழையாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வீட்டுக்கு திரும்பிய கனக துர்காவை வீட்டுக்குள் நுழைக் கூடாது என அவரது மாமியார் கூறியுள்ளார். உள்ளே நுழைந்த அவரை மாமியார் பிரம்பால் பலமாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியதில் காயமடைந்தார். இவர் திருப்பித் தாக்கியதில் மாமியாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஊர்க்காரர்களின் கோபத்துக்கு மேலும் ஆளானார்.
கணவனுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மேலும் ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவருடன் பிறந்த அண்ணன் தம்பிகளும் அவரை வெறுத்தனர். இந்த நிலையில் அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வரும் கனகதுர்கா அரசு மகளிர் மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News