பாஸ்வேர்டு அம்சங்களை தவறாக பயன்படுத்தும் செயலிகள்!
பாஸ்போர்ட் அம்சங்களை தவறுதலாக பயன்படுத்தும் செயலிகள் பற்றி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
By : Bharathi Latha
நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. எந்த அளவிற்கு இதில் நன்மை உள்ளதோ? அதே அளவிற்கு இதில் தீமையும் உள்ளது. பெரும்பாலும் தங்களுடைய பாஸ்வேர்டுகளை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். குறிப்பாக அதையும் கூகுள் அம்சத்தை பயன்படுத்தி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். கூகுள் நமக்கு தரும் தகவல்கள் அனைத்தும் சரியாக தான் இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இதிலும் ஏமாற்று வேலை நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து ஆப்களையும் இலவசமாக பயன்படுத்தலாம். இதன் காரணமாக நிறைய ஆப்கள் ஒருவர் பயன்படுத்தும் பயன்படுத்தும் போனில் உள்ள பாஸ்வேர்டுகளை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவற்றுள் தற்போது photo Tool மற்றும் craftsart போன்றவைகளும் அடங்கும். குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து எச்சரித்துள்ளது. இந்த செயலி குறிப்பாக ஒருவரின் புகைப்படத்தை வரைந்ததாக மாற்றித் தருகிறது.
இதன் மூலமாக ஒருவருடைய மொபைலில் உள்ள அனைத்து தகவல்களும் குறிப்பாக பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூகுள் பிளே ஸ்டோர் உள்ள ஆபத்துகளைப் பற்றி கூகுளுக்கு தகவல் அனுப்பினாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் இந்த செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. எனவே இத்தகைய செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று சைபர் கிரைம் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
Input & Image courtesy:Maalaimalar