Kathir News
Begin typing your search above and press return to search.

எங்களுக்கும் வேணும்.... வந்தே பாரத் ரயில் சேவை கேட்கும் திருவாரூர் மாவட்டம்...!

திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு வந்தே - பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டுமென ரயில் உபயோக உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுக்கும் வேணும்.... வந்தே பாரத் ரயில் சேவை கேட்கும் திருவாரூர் மாவட்டம்...!

KarthigaBy : Karthiga

  |  7 Dec 2023 7:30 AM GMT

திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நடராஜன் செயலாளர் எடையூர் ஆர்.வி மணிமாறன் தென்மண்டல ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை முடிவில் கூறியுள்ளதாவது:-


ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் முதன் முதலாக ஜங்ஷன் ஆக அறிவிக்கப்பட்ட இந்த வழியாக நீண்டத்துறை ரயில்கள் இயக்கப்பட்டது. காவிரி கடைமடை டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டியில் விவசாயம் மட்டுமே பொதுமக்களின் தொழிலாக இருந்தது. இவர்கள் குறைந்தபட்ச செலவில் விவசாய பொருள்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக உள்ளது.


அதற்கு ஏதுவாக இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் முதலில் போர்ட் மெயில் என்ற பெயரில் ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை இடையே அகல அறையில் பாதை அமைக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த வழித்தடத்தில் கம்பன் ரயில் மற்றும் நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் ராமநாதபுரம் காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாழ்கின்ற ரயில் பயணாளிகள் மிகுந்த கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


பட்டுக்கோட்டை நகரம் புகழ்பெற்ற வியாபார ஸ்தலமாகும். பட்டுக்கோட்டையில் இருந்து தேங்காய், கயிறு மற்றும் நெல் உற்பத்தி ஆகிய பொருள்களை கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் வர்த்தகர்கள் சென்னை மற்றும் பிற ஊருக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆன்மீக பெருமக்கள் ஆன்மீக தலைநகரான திருப்பதி வைணவ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதற்கு நேரடி ரயில் போக்குவரத்து பல ஆண்டுகளாக இல்லை .


தற்போது சாதாரண வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளும் முன்பதிவு உள்ள படுக்கை வசதி பெட்டிகளும் இணைத்து இயக்குவதற்கு மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி ,திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வழியாக திருப்பதி வரை ஏசி கோச் இல்லாத சாதாரண வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட்டால் இப்பகுதி பக்தர்கள், முதியோர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ள மிகவும் துணையாகவும் ரயில்வே துறைக்கு மிகவும் லாபமானதாகவும் அமையும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News