Kathir News
Begin typing your search above and press return to search.

“அமைதியும், நல்லிணக்கமும்” - இந்தியாவின் அறைகூவல்! அன்று சுவாமி விவேகானந்தர் முன்மொழிந்தார்; இன்று பிரதமர் மோடி வழிமொழிந்துள்ளார்!!

“அமைதியும், நல்லிணக்கமும்” - இந்தியாவின் அறைகூவல்! அன்று சுவாமி விவேகானந்தர் முன்மொழிந்தார்; இன்று பிரதமர் மோடி வழிமொழிந்துள்ளார்!!

“அமைதியும், நல்லிணக்கமும்” - இந்தியாவின் அறைகூவல்! அன்று சுவாமி விவேகானந்தர் முன்மொழிந்தார்; இன்று பிரதமர் மோடி வழிமொழிந்துள்ளார்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2019 11:08 AM GMT



அமெரிக்கவின் நியூயார்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான எங்கள் நாட்டில் தேர்தல் நடந்து முடிந்ததுள்ளது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான் இங்கே உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை தேர்வு செய்ததைவிட, எதற்காக தேர்வு செய்தார்கள் என்பது மேலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


உலகின் மிகப்பெரிய வளரும் நாடான இந்தியாவில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்களில், சுகாதார மேம்பாட்டிற்காக 11 கோடி கழிப்பிடங்களை நாங்கள் கட்டி முடித்து இருக்கிறோம். இது உலகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வளரும் நாடு என்ற நிலையில் நாங்கள் மருத்துவ திட்டங்கள், ஏழைகளுக்கான நேரடி மாநியம் வழங்கும் திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கல், ஊழலை ஒழிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றம் போன்றவை, ஏழை மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.


நான் ஐக்கிய நாட்டு சபைக்கு வந்தபோது, இங்கு உள்ள சுவரில் “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்போம்” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். நான் மிக சந்தோசமாக ஒன்றை சொல்லி கொள்கிறேன். இந்தியாவில் நாங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதனை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். வருகின்ற ஆண்டுகளில் நிலத்தடி நீர் சேமிப்பு, மக்கள் 15 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு போன்றவற்றை வழங்க இருக்கு வழங்கியிருக்கிறோம்.


அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் புதிய ரோடுகளை அமைக்க உள்ளோம். 2022-ஆம் ஆண்டின்போது, எங்களின் 75-ஆவது குடியரசுதினத்தை கொண்டாடும் தருணத்தில் மேலும் இரண்டு கோடி வீடுகளை ஏழைகளுக்கு வழங்க உள்ளோம்.


எங்கள் நாடு, புத்தபெருமான் வழங்கிய அமைதி செய்தியை உலகத்திற்கு வழங்கியுள்ளது. ஆகவேதான் நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம். உலகம் அந்த பயங்கரவாதம் என்ற அரக்கன் பிடியில் சிக்கி சிதைந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.


3000 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் நாட்டில் வாழ்ந்த கணியன் பூங்குன்றனார் என்ற தமிழ் புலவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், நாம் உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் அந்த ஊரும் நமது ஊரே. அங்கிருக்கும் மக்களும் எங்களது உறவினர்களே என்பதாகும். இதுதான் எங்கள் நாட்டின் தனித்தன்மை. இதைத்தான் நாங்கள் உலகத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்.


பயங்கரவாதம் இந்தியாவிற்கு மட்டும் எதிராக எதிரானது அல்ல. உலகத்திற்கே எதிரானது. நமது மனித குலத்திற்கே எதிரானது. எனவே உலகில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்.


125 ஆண்டுகளுக்கு முன்பு, சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டின் போது, எங்களின் ஆன்மீக குருவான சுவாமி விவேகானந்தர், “நல்லிணக்கமும் அமைதியும்தான் உலகிற்கு தேவை” என்று அறைகூவல் விடுத்தார். நாங்களும் அதே நல்லிணக்கமும் அமைதியும் வேண்டுமென்று உலகிற்கு வேண்டுகோள் வைக்கிறோம்.


இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


This is a Translated Articles From OP India


Next Story
கதிர் தொகுப்பு
Trending News