Kathir News
Begin typing your search above and press return to search.

Pedophiliaவை ஊக்குவித்து பாடல் எழுதிய வைரமுத்து மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்!

Pedophiliaவை ஊக்குவித்து பாடல் எழுதிய வைரமுத்து மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார்!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  26 May 2021 2:37 PM GMT

திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து குழந்தைகள் மீதான பாலியல் இச்சையைத் தூண்டும் வண்ணம் பாடல் எழுதி வெளியிட்டதை அடுத்து அவர்‌ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் வைரமுத்து, கலைஞர் தொலைக்காட்சி உடனான 'நாட்படு தேறல்' என்ற பெயரில் தொடர்ச்சியாக எழுதி வரும் பாடல்களில் ஒரு பகுதியாக 'என் காதலா' என்ற தலைப்பில் அண்மையில் ஒரு பாடலை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் பாடல் பள்ளிச் சிறுமி தலை நரைத்த வயதான ஆண் மீது காதல் கொள்வதாக பாலியல் வார்த்தைகளுடன் எழுதப்பட்டுள்ளது.

Pedophilia எனும் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வரும் இந்தக் கால கட்டத்தில் குழந்தைகள் மீது பாலியல் இச்சை கொள்வது சரிதான் என்று நியாயப்படுத்துவது போன்று வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமைக்கு நெருக்கமானவரான வைரமுத்து மீது #MeToo விவகாரத்தில் பல பெண்கள் அவர் தங்களிடம் அடுத்து மீறியதாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது கூட சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் பாலியல் தொல்லை அளித்ததாகவும் ஆசிரியர் மீது புகார் எழுந்த நிலையில் அதுபற்றி கனிமொழி தயாநிதி மாறன் உட்பட திமுக தலைவர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த போதும், அப்பட்டமாக Pedophiliaவை ஊக்குவிக்கும் வண்ணம் பாடல் எழுதிய வைரமுத்து பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் Legal Rights Protection Forum என்ற தன்னார்வ அமைப்பு இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளது. Pedophiliaவை ஊக்குவிக்கும் வகையில் பாடல் எழுதிய வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் பாடலை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கும், ஒளிபரப்ப தடை விதித்து கலைஞர் தொலைக்காட்சிக்கும் நோட்டீஸ் அனுப்ப கோரியும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News