Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் 'வந்தே பாரத்' ரயில் வேண்டும் என கேட்கும் மக்கள் : மோடி பெருமிதம்

வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகள் நடுத்தர மக்களையும் அதிக அளவில் கவர்ந்ததால் நாடு முழுக்க 'வந்தே பாரத்' வேண்டும் என்று கேட்பதாக மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் வேண்டும் என கேட்கும் மக்கள் : மோடி பெருமிதம்

KarthigaBy : Karthiga

  |  8 July 2023 5:45 AM GMT

பிரதமர் மோடி நேற்று சத்தீஸ்கர் மாநில பயணத்தை முடித்துக் கொண்டு உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சென்றார். அங்கு 'கீதா பிரஸ்' என்ற பதிப்பகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் நேரம் வந்துவிட்டது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் கடற்படையின் இலச்சினை அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்தது. அதை இப்போது மாற்றிவிட்டோம்.


அதேபோல் ராஜபாதையின் பெயர் 'கடமை பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு பிறகு அயோத்திகள் ராமர் கோவில் கட்டும் கனவு நிறைவேறி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். அங்கு அவர் தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலில் ஏறி அதில் உள்ள வசதிகளை பார்த்தார். அங்கு அமர்ந்திருந்த 34 பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார்.


அங்கு நடந்த விழாவில் கோரக்பூரிலிருந்து அயோத்தி வழியாக லக்னோ செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் காரணமாக பயண நேரம் 2:30 மணி நேரம் குறையுமென்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :-


எனது கோரக்பூர் பயணத்தில் வளர்ச்சியும் பாரம்பரியமும் ஒருசேர அமைந்துவிட்டது. 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் தங்கள் பகுதி ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று தலைவர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆனால் இப்போது தங்கள் பகுதிக்கு 'வந்தே பாரத் ரயிலை' அறிமுகப்படுத்துமாறு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எனக்கு கடிதம் வருகிறது.


அந்த அளவுக்கு நடுத்தர மக்களுக்கு வசதிகளையும் சௌகரியத்தையும் அளிக்கும் இரயிலாக வந்தே பாரத் திகழ்கிறது. மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு 12,100 கோடி மதிப்பிலான 29 வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அவற்றின் சரக்கு ரயில் வழித்தடத்தில் ரூபாய் 6760 கோடி மதிப்பிலான ரயில் பாதை பிரிவும் அடங்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News