Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களே உஷார்... இந்த செயலியின் மூலம் இப்படி ஒரு நூதன மோசடியா?

வாட்ஸ் அப் மூலம் நடக்கும் நூதன மோசடிகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன

மக்களே உஷார்... இந்த செயலியின் மூலம் இப்படி ஒரு நூதன மோசடியா?

KarthigaBy : Karthiga

  |  13 May 2023 4:45 PM GMT

கடந்த சில நாட்களாக. வாட்ஸ் அப் இல் பலருக்கும் வெளிநாட்டு எண்கள் மூலம் சர்வதேச அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருகின்றன. இது மெய் நிகர் எண்ணை பயன்படுத்தி நடக்கிறது. முதலில் அவர்கள் உங்களுக்கு வேலை தருவது போல் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள்.


இது போன்று வாட்ஸ் அப்பில் வரும் சர்வதேச எண்களின் போலி அழைப்புகள் புதிதல்ல. ஆனால் கடந்த சில நாட்களாக இது அதிகரித்து வருகிறது. இந்த மோசடியில் மோசடி கும்பல் வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு அதில் பகுதிநேர வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்பதைப் போன்று அழைப்பு விடுப்பார்கள். அந்த குறுஞ்செய்தியை நம்பி நீங்கள் பதிலளித்தால் அவர்கள் உங்களுக்கு வேலை தருவது போல் தருவார்கள். பிறகு அதற்கான ஊதியமாக சிறுதொகையை உங்கள் வங்கி கணக்கில் அனுப்புவார்கள்.


முதலில் சின்ன சின்ன வேலைகளுக்கு உங்கள் வங்கி கணக்கிருக்கு பணம் வரும். உதாரணத்திற்கு மூன்று யூ-டியூப் வீடியோக்களுக்கு லைக் போடுங்கள் என்ற வேலை கொடுக்கப்பட்டு அதற்கான சன்மானமாக ரூபாய் 50 அல்லது 150 உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படலாம். பணம் வந்தால் நீங்கள் அதனை நம்ப ஆரம்பிப்பீர்கள்.


நீங்கள் வேலை செய்யும் பொழுது ஏதேனும் காரணம் சொல்லி அதை சரி செய்தால் தான் இனிமேல் உங்களுக்கு பணம் வரும் என்று கூறி உங்களிடம் பணம் பறிப்பார்கள். நீங்களும் அவர்கள் கூறும் காரணத்தை நம்பி உங்கள் பணத்தை கொடுத்து இழந்துவிடுவீர்கள். பிறகு தான் தெரியும் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது. எனவே இது போன்ற மோசடியில் இருந்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.மக்களே உஷார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News