லடாக்கில் முதல் சுதந்திர தினம் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் ! எம்.பி ,பொது மக்களுடன் உற்சாக நடனம்! வைரல் வீடியோ!
லடாக்கில் முதல் சுதந்திர தினம் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் ! எம்.பி ,பொது மக்களுடன் உற்சாக நடனம்! வைரல் வீடியோ!
By : Kathir Webdesk
சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ.க எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், பொதுமக்களுடன் நடனமாடி கொண்டாடினார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன்பிரதேசங்களாக அறிவித்தது.
இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, லடாக் தொகுதி எம்.பி.,யான பா.ஜ.கவை சேர்ந்த ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டசிறப்பு அந்தஸ்து காரணமாக லடாக் பகுதி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்திஆகியோர், மாநிலத்தை, குடும்ப தொழிலுக்காக பயன்படுத்தினர். அந்தஸ்து நீக்கப்பட்டால், அவர்களின் தொழில் பாதிக்கப்படும் என்றார்.
தி.மு.கவினரைப் பார்த்து உங்களுக்கு லடாக் எங்கு இருக்கிறது என்று தெரியுமா? எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா? எப்போதாவது வந்திருக்கிறீர்களா? எங்களின் பிரச்சினை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேள்விகளால் துவசம் செய்தார். தி.மு.க – காங்கிரஸ் எம்.பிக.கள் கப்சிப் ஆனார்கள்.
அவரது பேச்சிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. மேலும், அவருக்கு நாடுமுழுவதும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது. அவரது பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் லேயில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பங்கேற்றார். அரக்கு நிறத்தில், லடாக் பகுதி ஆண்கள்அணியும் பாரம்பரிய உடையுடன், கண்ணாடியுடன் காணப்பட்ட அவர்,பொது மக்களுடன் இணைந்து நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார். தொடர்ந்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் அவர் இசைத்தார்.
https://twitter.com/ANI/status/1161886417011822593
https://twitter.com/ANI/status/1161842430188146690
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தேச பக்தியும், தேச ஒற்றுமையும் நிரம்பி வழியும் சூழ்நிலையில் இருந்தோம். ஆகவே எங்களின் பாரம்பரிய முறைப்படி சுதந்திர தின விழாவை கொண்டாட முடிவு செய்தோம். இந்த சுதந்திரதின கொண்டாட்டங்கள், புதிய லடாக்கின் வளர்ச்சிக்கான டிரெயிலர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.