Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக மசூதிக்கு படையெடுப்பு - சொல்றத கேட்கமாட்டேங்கறாங்களே என புலம்பும் பாக் பிரதமர் இம்ரான் கான்!

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக மசூதிக்கு படையெடுப்பு - சொல்றத கேட்கமாட்டேங்கறாங்களே என புலம்பும் பாக் பிரதமர் இம்ரான் கான்!

ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டமாக மசூதிக்கு படையெடுப்பு - சொல்றத கேட்கமாட்டேங்கறாங்களே என புலம்பும் பாக் பிரதமர் இம்ரான் கான்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 7:41 AM GMT

பாகிஸ்தானில் பஞ்சாப், சிந்து மாகாணம் போன்ற இடங்களில் இருந்து வந்த செய்திகளின்படி மத குருக்கள்கள் கொரோனாவை வீழ்த்த அல்லா ஒருவரே வலிமையானவர் எனவும் எனவே வயதில் பெரியவர்களும், நோயாளிகள் மட்டும் மசூதிகளுக்கு வந்து தொழுகை நடத்துமாறும், மற்றவர்கள் வீட்டில் இருந்தே நமாஸ் செய்யுமாறும் சென்ற வார இறுதியில் கூறினர். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பீதி பாகிஸ்தான் உட்பட உலகெங்கும் அதிகரித்துள்ளதை அடுத்து படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள் அனைவரும் மசூதிக்கு கூட்டம் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

இதனால் அங்குள்ள, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. பல கட்டுப்பாடுகளை விடுத்தும் மக்கள் மசூதிகளுக்கு செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தும் மக்கள் கேட்கவில்லை என்றும் ஏராளமான மக்கள் சட்டத்தை மீறுவதால் அவர்களை தண்டிக்க முடியவில்லை என்றும் போலீசார் கூறி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சில மத குருக்கள்கள் மசூதிகளில் நடைபெறும் தொழுகைகளில் கலந்து கொள்ள மக்களை ஊக்குவிப்பதாகவும், கொரோனா பயத்தால் மக்கள் அல்லாவிடம் உதவி பெற ஓன்று கூடுவதாகவும் செல்வதாக இஸ்லாமாபாத்தில் ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

நாட்டின் பெரும்பகுதி ஊரடங்கின் கீழ் இருப்பதாக அறியப்பட்டாலும், பல மசூதிகள் பாகிஸ்தான் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன, குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மசூதிகளும் திறந்து வைத்து கூட்டம் கூட்டமாக பலர் தொழுகை நடத்தியதாக பலர் கூறினர். .

"நாங்கள் கொரோனா வைரஸை நம்பவில்லை, நாங்கள் அல்லாஹ்வை நம்புகிறோம். என்ன நடந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து தான் "என்று இஸ்லாமாபாத்தில் வசிக்கும் அல்தாஃப் கான் கூறினார்.

மக்கள் மசூதிக்கு வருவதை தடுக்க சிந்து மாகாண அரசு மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்ததாகவும், அதே நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் பிரார்த்தனை செய்ய பஞ்சாப் அரசு மத தலைவர்கள் மூலம் ஃபத்வா பிறப்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்ற அறிவுறுத்தல்களை பிற மாகாணங்களும், மத்திய அரசும் வழங்கின.

சில மசூதிகளும் மக்களை வீட்டில் இருந்தே பிரார்த்தனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.

இருப்பினும், மக்களில் பெரும்பாலோர் மசூதிகளுக்கு செல்வதில்தான் அதிகம் ஆர்வம் கட்டுவதாகவும், அரசாங்கம் தனது முடிவை ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செயல்படுத்த முடியாது "என்று கராச்சி நகர ஜாமியா மசூதி பிரார்த்தனைத் தலைவர் குபா கூறினார்.

கராச்சியில் உள்ள நியூ மேமன் மசூதி மற்றும் வேறு சில பகுதிகளில் உள்ள மசூதிகளில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டும் பிரயோஜனம் எதுவும் இல்லை என்றும் மக்கள் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்வதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், சுக்கூர், லர்கானா, ஹைதராபாத் மற்றும் மிர்புர்காஸ் பிரிவுகள் உட்பட அனைத்து நகரங்களிலும் மசூதிகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பிரார்த்தனை நடத்தும் தலைமை குருக்கள் உட்பட நான்கு முதல் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கிராமப்புறங்களில் ஊரடங்கு கண்டிப்பான முறையில் செயல்படுத்தப்படவில்லை. "எங்கள் ஜாமியா மசூதியில் அதே கூட்டத்தினருடன் நாங்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்துள்ளோம்" என்று காம்பர் ஷாஹத்கோட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அப்துல் ஹனன் கூறினார்.

பலூசிஸ்தானின் நிலைமையும் பாகிஸ்தான் போலத்தான் உள்ளது, ஒரு போலீஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாகாண தலைநகர் குவெட்டாவின் காந்தாரி மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கலந்து கொள்ள ஒரு பெரிய கூட்டம் வந்தது. மாகாணத்தின் பிற பகுதிகளில். பெரும்பாலான மசூதிகள் திறந்திருந்தன, ஆனால் வருகை குறைவாக இருந்தது.

பஞ்சாபில், வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு மக்களைக் கேட்டு மசூதிகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நகரங்களில், உத்தரவுகள் ஓரளவு பின்பற்றப்பட்டன, ஆனால் கிராமப்புறங்களில் நிலைமை வேறுபட்டது, ஏனெனில் மக்கள் பிரார்த்தனை செய்ய அங்கு அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

லாகூரில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான தார் உல் இப்தா ஜாமியா நெய்மியா ஒரு வித்தியாசமான ஃபத்வாவை (மதக் கட்டளை) வெளியிட்டார், அரசாங்க உத்தரவின்படி நடக்க விருப்பமுள்ளவர்கள் மசூதிகளுக்கு வருவது கட்டாயமல்ல என்றும், மற்ற மக்கள் சபையில் பிரார்த்தனை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.

மசூதிகளுக்குச் செல்வது தொடர்பாக காவல்துறையினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக கராச்சியின் லியாகதாபாத் பகுதியில் உள்ள கவுசியா மசூதிக்கு அருகே மக்கள் கூடியபோது மசூதிக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்திய போலீசார் மீது கற்களை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காவல்நிலைய ஆய்வாளர் ஒருவரின் வாகனம் சேதம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் பழமை வாதிகளின் பிடியில் படித்தவர்களும் சிக்கியுள்ள நிலையை பார்த்து கவலையடைந்துள்ள பிரதமர் இம்ரான்கான் ஒன்றும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கிறாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News