ஹிந்துத்துக்கள் யார்? கோட்பாட்டை சேர்ந்தவரா? இல்லை கோட்பாடுகளை சார்ந்தவரா? - சுவாரசியமான அலசல்
ஹிந்துத்துக்கள் யார்? கோட்பாட்டை சேர்ந்தவரா? இல்லை கோட்பாடுகளை சார்ந்தவரா? - சுவாரசியமான அலசல்
By : Kathir Webdesk
தெலுங்கு
இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற
புட்டப்பருத்தி நாராயண சாருலு ஆரம்பகால பள்ளிப்படிப்பு ஏதும் இல்லாமலே 14
மொழிகளை கற்றுத் தேர்ந்தார். இலக்கியங்களில் மிகப்பெரிய ஆளுமை
பற்றி அவர் சிறுவயதிலேயே . “பெனுகொண்டா
லட்சுமி” என்ற படைப்பை ஏற்படுத்தி இருந்தார். அது பின்னாளில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் .
“வித்துவான்” பட்டம் பெறுவதற்கு அவசியமான ஒரு பாடமாக வைக்கப்
பட்டிருந்தது. இங்கு
மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த பட்டத்திற்காக
தான் உருவாக்கிய பாடத்திலேயே படித்து பரிட்சை எழுதிய நாராயண சாருலு அதில் தோல்வி அடைந்தார்.
காரணம்
அந்த பாடத்தை சுற்றி மற்றவர்கள் அமைத்திருந்த அவர்கள்
சொந்த கருத்தியல்கள் தான். இந்த
கருத்தை முன்வைத்து நாம் சொல்ல வருவது என்னவென்றால், அரசியலமைப்பு சட்டத்தை அதை உருவாக்கிய அம்பேத்காராலேயே இன்றைக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியாத
அளவிற்கு அதை சுற்றி அத்தனை விளக்கவுரைகள் உருவாகியுள்ளன.
இந்திய
அரசியலமைப்பு சட்டத்தை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கூடி அமைத்தார்கள்
என்றால் அதை ஒட்டி எழுந்த தாத்பரியங்களை பின்னால் வந்த சட்ட வல்லுனர்கள் ஒரு விளக்கமாக தங்கள்
பார்வையில் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதில் மிக முக்கியமானதாக இரண்டு விஷயங்கள்
வருகிறது ஒன்று அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு இரண்டாவது அத்தியாவசியமான மத வழிபாட்டு விளக்கங்கள்.
இது
இரண்டுமே அரசியலமைப்பு சட்டத்தை ஒட்டிய தாத்பரியங்கள். இந்த அடிப்படை கட்டமைப்பு என்கிற
ஒன்று அரசியலமைப்பு சட்டத்தின்படி நிகரான முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்படி அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பு
என்பது ஒரு குறிப்பிட்ட தன்மையுடையதாக மட்டுமல்லாது அது என்றைக்கும் மாறததாக இருக்கிறது. இரண்டாவதாக இந்த கட்டமைப்பின் பார்வையிலேயே
கொஞ்சம் ஆழமாக பார்த்தால் அத்தியாவசியமான மத வழிபாட்டு விளக்கங்கள் என்ற ஒரு
தார்ப்பரியம் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டு வழக்கம் அல்லது நிகழ்ச்சி அந்த மதத்திற்கு அத்தியாவசியமானதாக இருந்தால் அதற்கு உடனடியாக சட்டப்பாதுகாப்பு கிடைத்துவிடும் என்ற அளவில் தான் சூழல் இருக்கிறது. இங்கு பிரச்சனை என்னவென்றால் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு தங்கள் மதமான இந்து மதத்திற்கு என்று அத்தியாவசியமான வழிபாட்டு முறைகளோ வழக்கங்களை பொதுவான ஒரு வழிபாட்டு நியதியோ, மத புத்தகமோ எதுவும் இல்லை எனும்போது இந்த விஷயம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கான பதில் மிக எளிதானது.
இந்தியாவின் பரவி கொண்டிருக்கும் ஆபிரஹாம் வழிவந்த மதங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்தத் தாத்பரியம் மிக முக்கியமானதாக வளர்ந்திருக்கிறது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒரு இந்து மத வழிபாட்டு வழக்கம் சட்ட பாதுகாப்பு பெற வேண்டும் என்றால் அது இந்து மதத்திற்கு மிக மிக அத்தியாவசியமாக இருத்தல் வேண்டும். ஆனால் அப்படி ஒன்றை எப்படி நடைமுறையில் காண்பிக்க இயலும்.
இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான வழிபாட்டு முறைகள் இருக்கிறது ஆனால் ஒருமுகத் தன்மை கொண்ட ஆபிரகாம் வழிவந்த மதங்களால் தங்களின் எந்த ஒரு மத வழக்கத்திற்கும் சட்ட பாதுகாப்பு பெற்றுவிட முடியும் ஏனென்றால் அவர்களின் மார்கங்கள் ஒரு குறிப்பிட்ட நபரையோ, குறிப்பிட்ட புத்தகத்தையோ( கோட்பாட்டையோ) சார்ந்து குறிப்பிட்ட காலத்தில் வளர்ந்து முடித்தது!!
இந்திய சுதந்திரம் அடைந்து மூன்று தலைமுறையாக இது போன்ற இந்து மதத்திற்கு ஒத்திசைவு இல்லாத தாத்பரியங்களை நடைமுறைப்படுத்தப்பட்டு நம்மை திசை திருப்பியிருக்கிறத்உ. அடுத்த தலைமுறையாவது இதிலிருந்து மீளுமாறு தகுந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
Credit : India Facts