கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் மீள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மூன்று நாட்கள் தன்வந்திரி ஹோமம்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக மக்கள் மீள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மூன்று நாட்கள் தன்வந்திரி ஹோமம்!

சென்னையில் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் உறுப்பினர் சேகர் ரெட்டி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தும் உலக மக்கள் மீள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தன்வந்திரி ஹோமம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது' என தெரிவித்தார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வரவும், இனி மேல் எந்த பிரச்சனையும் வராமல் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏப்ரல் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது எனவும் மேலும், திருப்பதி வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குழு, அலிபிரி மற்றும் சந்திரகிரி வழியாக நடந்து வரும் மக்கள் மற்றும் காரில் வரும் மக்களை தெர்மோ மீட்டர் சாதனம் மூலமாக பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர், அப்படி ஏதாவது காய்ச்சல், இருமல் இருந்தால் அனுமதிப்பதில்லை என கூறியனார்.