மக்களை பிளவுபடுத்துவோரிடம் எச்சரிக்கை தேவை - பிரதமர் மோடி!
மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதை ஒட்டி இந்தி பேசும் மாநிலங்களின் வாக்காளர்களை இழிவுபடுத்தி வருகிறார்கள். மக்களை பிளவுபடுத்துவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி தனது வலைதள பதிவில் கூறியுள்ளார்.
By : Karthiga
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. இது தொடர்பாக விமர்சனங்கள் சிலர் வடக்கு-தெற்கு என்று பிரிவினையை உண்டாக்கவும் இந்தி பேசும் மாநிலங்களின் வாக்காளர்களை இழிவு படுத்தியும் 'மாபெரும் உருகல்' என்ற தலைப்பில் ஒரு செய்தி துணுக்கை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதற்கு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
தங்களது ஆணவம், பொய்கள் அவநம்பிக்கை, அறியாமை ஆகியவற்றுடன் அவர்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் மக்களை பிளவுபடுத்தும் அவர்களது செயல் திட்டம் குறித்து உஷாராக இருங்கள். 70 ஆண்டுகால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது. அவர்கள் இன்னும் பல உருகல்களுக்கு தயாராக வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் . பா.ஜனதா தலைவர்கள் கூறியதாவது:-
சமூக வலைதள விமர்சனத்திற்கு பிரதமர் பதிலளிப்பது வழக்கத்துக்கு மாறானது. அவரது கருத்து ஆக்ரோஷமாகவும் எதிர்க்கட்சிகளை நேருக்கு நேர் எதிர் கொள்வதாகவும் அமைந்துள்ளது. ஒரு நல்ல பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிப்பது போல் இருக்கிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.
SOURCE :DAILY THANTHI