Begin typing your search above and press return to search.
காஷ்மீரில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, அனைவருக்கும் சமூக ரீதியான ஒதுக்கீடுகள் இனி கிடைக்கும்!!
காஷ்மீரில் துப்புரவுப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, அனைவருக்கும் சமூக ரீதியான ஒதுக்கீடுகள் இனி கிடைக்கும்!!
By : Kathir Webdesk
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தினர் கூறும்போது, “துணைநிலை ஆளுநர் மற்றும் சட்டப்பேரவையுடனான டெல்லி நிர்வாகமே இனி ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் முன்மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் ஜம்மு-காஷ்மீரின் துப்புரவுப் பணிகளுக்காக கடந்த 1957-ம் ஆண்டில் வால்மீகி எனும் தலித் சமூகத்தினர் மற்ற மாநிலங் களில் இருந்து அழைத்து வரப் பட்டனர். துப்புரவுப் பணி மட்டுமே செய்து வந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் நிரந்தரக் குடியுரிமை யும் அளிக்கப்படவில்லை.
தற்போது இந்த மாற்றத்தின் மூலம் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதே போல், மத்திய அரசின் சமூக ரீதியான ஒதுக்கீடுகளும் ஜம்மு-காஷ்மீரில் இனி அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
Next Story