பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி: கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்கத் தடை!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக ராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கேன் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கத் தடை.
By : Bharathi Latha
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் வழங்க போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கோவை, மதுரை, கன்னியாகுமரி, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுபிச்ச சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பவம் தொடர்ச்சியாக சந்தேகம் படும்படியான நபர்களை குறித்து போலீசார் சார்பாக மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.
இராமநாதபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் வகையில் யாராவது வாகனங்களில் சென்றாளோ அல்லது பெட்ரோல் குண்டு உள்ளிட்டவைகளை எடுத்து செல்கிறார்களா என்ற சோதனை நடத்தி வருகிறார்கள். நபர்களின் வாகனங்களின் பதிவு எண்ணையும் மாற்றி செல்வதாக வந்து தகவல் தொடர்ந்து வாகனங்களில் சரி பார்த்து போலீசார் அனுப்பி வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை ஒன்றையும் வழங்கி உள்ளார்கள். அதன்படி கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாங்க வரும் அவர்களின் குறித்து தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Thanthi News