பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை - ராமநாதபுரத்தில் பரபரப்பு
PFI அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு.
By : Bharathi Latha
நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மட்டும் இன்றி அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்த தமிழக முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களில் தடை எதிரொலி காரணமாக போராட்டங்களும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாதவாறு முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போடுசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சுப்பிரமணியம் தங்கதுரை அவர்கள் கூறுகையில், "சமீப நிகழ்ச்சிகளை காரணமாக மாவட்டங்கள் முழுவதும் பழுத பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கியமான இடங்களில் பாம்பன் பாலம், ரயில் பாலம், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்போம் ஏற்படுத்தப் பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: Samayam News