Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசை கண்டித்து ஐந்து மண்டலங்களில் மறியல் போராட்டம் - அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்ள ஐந்து மண்டலங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தி.மு.க அரசை கண்டித்து ஐந்து மண்டலங்களில் மறியல் போராட்டம் - அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  6 Dec 2022 10:45 AM GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் திருச்சி மண்டல மறியல் போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் நேற்று திருவாரூரில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் சிறப்பு தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ரேஷன் ,சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு நிரந்தர ஊதியம் விகிதம் செய்ய வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித் துறை கொண்டு வர வேண்டும். அரசு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் கொத்தடிமைகள் போல் மாற்றும் அரசாணைகள் 152, 139 ஆகியவற்றை உடனே ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும்.


நேர்மையான வெளிப்படை தன்மையுடன் கூடிய பணியாளர்கள் நியமனம், அரசாணைகள் படியான இடமாறுதல்கள் பதிவு உயர்வுகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-9-ஆம் தேதி சென்னை, சேலம், திருச்சி, கடலூர், மதுரை ஆகிய ஐந்து மண்டலங்களில் மரிய போராட்டம் நடைபெறும். எனவே தமிழக அரசு பணியாளர்களின் நியாயமான கோரிக்கை குறித்து சங்கட நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அறிவித்தபடி மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News