Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பொருளாதாரம் 2400 லட்சம் கோடியாக உயரும் - பியூஸ் கோயல் நம்பிக்கை

சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 2400 லட்சம் கோடியாக உயரும் என்று பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்திய பொருளாதாரம் 2400 லட்சம் கோடியாக உயரும் - பியூஸ் கோயல் நம்பிக்கை
X

KarthigaBy : Karthiga

  |  8 Sept 2022 12:30 PM IST

சுதந்திர தின நூற்றாண்டுக்குள் இந்திய பொருளாதார 2,400 லட்சம் கோடியாக உயரும் என்று பியூஸ் கோயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது.


கடந்த நிதியாண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030ஆம் ஆண்டுக்குள் இதை இரண்டு ட்ரில்லியன் டாலராக உயர்த்த விரும்புகிறோம். உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது .நாட்டின் சுதந்திர நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் முப்பது ட்ரில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால் பொருளாதாரம் 45 ட்ரில்லியன் டாலர் வரை உயரக்கூடும். கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News