Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த திட்டம் - வாரிய அதிகாரிகள் நடவடிக்கை!

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை அடுத்த மாதம் முதல் 4.70 சதவீதம் உயர்த்த வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த திட்டம் - வாரிய அதிகாரிகள் நடவடிக்கை!

KarthigaBy : Karthiga

  |  7 Jun 2023 1:45 PM GMT

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடும் வெயில் காரணமாக நிறுவனங்கள் வணிக வளாகங்கள் வீடுகளில் ஏ.சி , ஏர் கூலர் , மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின்சாரத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் 2 கோடியே 96 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.


2020- 2021 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார தேவை 16,481 மெகாவாட் ஆக இருந்தது. அதுவே இப்போது 2023- 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் 45 நாட்களில் தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார தேவை என்பது 19,387 மெகாவட்டு அதிகரித்து உள்ளது . ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் உச்சபட்ச மின்சார நுகர்வு அதிகரித்து உள்ளது .


அதேபோல ஒரு நாள் சராசரியை எடுத்து பார்த்தால் சென்னையில் 431 மில்லியன் யூனிட் என்ற அளவிற்கு இந்த உச்சபட்ச மின்சார தேவை அதிகரித்துள்ளது. 2019- 2020 இல் உச்சபட்ச மின்சார தேவை 3,738 அளவிற்கு இருந்திருக்கிறது. அதுவே 2020- 2021-ல் 3,127 மெகா வாட்டாக இருந்தது தற்போது சென்னையின் தேவை நான்காவது 16 மெகா வாட்டாக உயர்ந்திருக்கின்றது.


கடந்த 2020 - 2021 இல் சென்னையின் தேவை 66 மில்லியன் யூனிட் அளவுக்கு இருந்தது . இப்போது நடப்பாண்டுக்கு 90 மில்லியன் யூனிட் அளவிற்கு உயர்ந்திருக்கிறது . அதனால் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் மின்வாரியத்தின் நிர்வாகம், உற்பத்தி விநியோகம் உள்ளிட்ட செலவுகள் மற்றும் நிலக்கரி கொள்முதல், புதிய துணை மின் நிலையங்கள், வழித்தடங்கள் அமைப்பதற்கான செலவினங்களும் அதிகரித்து வருகிறது.


ஏற்கனவே 1.59 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரும் வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது . அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 10 - ஆம் தேதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்தது. வீடுகளுக்கு 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரரூபாய் 4.50 -ம் 401 முதல் 500 யூனிட்டுகள் வரை ரூபாய் 6-ம் 501 முதல் 600 யூனிட் வரை ரூபாய் 8-ம் 601 முதல் 800 யூனிட் வரை ரூபாய் 9-ம், 801 முதல் 1000 யூனிட் வரை ரூபாய் பத்தும், 1800 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11 என்ற அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டது . தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.3 ஐந்திலிருந்து 6.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆணையம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவையில் வரும் 2026 2027 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளது கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி பணவீக்க விகித அளவு அல்லது ஆறு சதவீதம் இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த அளவு கட்டணம் உயர்த்த வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை பணவீக்கம் 4.70 சதவீதமாக இருப்பதால் மின்சார கட்டணமும் 4.70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.


செலவுகளை சமாளிக்கவும் கடன் அளவை குறைப்பதற்காகவும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் 10 - ஆம் தேதி அதாவது கடந்த 9 மாதத்திற்கு முன்பு தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. மீண்டும் மின்சார கட்டணம் உயர்வை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News