பிரதமர் மோடி மீது தாக்குதல் திட்டம், உத்திரபிரதேசத்தில் கலவரம் - என்.ஐ.ஏ அம்பலப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சதிச்செயல்கள்
பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டம் தீட்டியதாக அமலாக்க பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
By : Mohan Raj
பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டம் தீட்டியதாக அமலாக்க பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது, சோதனையின் முடிவில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகம்மை தெரிவித்துள்ளது. இதில் கேரளாவில் நடைபெற்ற சோதனையின் போது அந்த அமைப்பின் உறுப்பினர் சபிக் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் பிகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சதி திட்டம் தீட்டியதாக உண்மைகள் வெளிவந்துள்ளன. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனி நபர்கள் மீது தாக்குதல் நடத்தவும் பி.எப்.ஐ அமைப்பு திட்டம் தீட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத தாக்குதலுக்காக பல ஆண்டுகளாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி சோதனை நடத்திவருகிறது. மேலும் தாக்குதல் நடத்த அவரது வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.