PM கிசான் திட்ட பயனை அடைய விவசாயிகள் மறக்காமல் இதனை செய்ய வேண்டும்
PM கிசான் திட்டத்தை விவசாயிகள் பயன் பெறுவதற்கு இதை கட்டாயம் செய்ய வேண்டும்.
By : Bharathi Latha
விவசாயிகளுக்காக மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டம் பிரதான் மந்திரி கிசான் திட்டம். அவர்களுக்கு 2000 வீதம் மாதம் மூன்று தவணைகளில் ஆண்டுகள் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறும் தகுதியை அவர்கள் பெறுகிறார்கள். எனவே இத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் தற்போது இது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அதாவது eKYC இவருக்கு ஜூலை 31ம் தேதிக்குள் புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தின் 12வது தவணை வங்கி கணக்குக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலம் ஆண்டு முழுவதும் சுமார் மூன்று காலாண்டு தவணைகள் பெறப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11 ஆவது தவணை வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுமார் 10 கோடிக்கு அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது 12வது திட்ட தொகுப்பு பெறுவதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாக ஆக வேண்டுமெனல் அவர்கள் தங்களுடைய விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு சுமார் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் கட்டாயமாக அனைத்து விவசாயிகளும் இந்த அப்டேட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நாட்கள் நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. EKYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18