Kathir News
Begin typing your search above and press return to search.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்து 2 நாள் முக்கிய பேச்சு வார்த்தை: ஒளி மயமாக மாறப்போகும் நம் மாமல்லபுரம்!!

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்து 2 நாள் முக்கிய பேச்சு வார்த்தை: ஒளி மயமாக மாறப்போகும் நம் மாமல்லபுரம்!!

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்தித்து 2 நாள் முக்கிய பேச்சு வார்த்தை: ஒளி மயமாக மாறப்போகும் நம் மாமல்லபுரம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Sept 2019 3:12 PM IST


பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் அடுத்த அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


உலகின் மாபெரும் வல்லரசு நாடுகளான இந்தியாவும் சீனாவும் தங்களது நாடுகளின் நல்லுறவையும் புரிந்துணர்வையும் மேலும் வளர்ப்பதுடன் முதலீட்டைப் பெருக்கவும் இந்தப் பேச்சுவார்த்தை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கடற்கரை நகரான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அடுத்த மாதத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.


இந்தியா-சீனா இடையிலான இரண்டாவது மாநாட்டையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுடன், வெளியுறவுத்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


அக்டோபர் 11, 13 ஆகிய இரு நாட்கள் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


இதற்காக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


பேச்சுவார்த்தைக்கு இடையே இரு தலைவர்களும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்ட மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பார்வையிட பிரதமர் மோடியும் சீன அதிபரும் திட்டமிட்டுள்ளனர்.


கடந்த ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு இடையிலான முதலாவது சந்திப்பு சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்றது. அப்போது அனைத்துலக தரத்துக்கு ஏற்ப இருநாட்டு உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தனர். சந்திப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு ஷி ஜின்பிங்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். இதனால் மாமல்லபுரம் ஒளி நகரமாக மாறும் என்று கூறப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News