ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சனைகளுக்கு பயங்கரவாதமே காரணம் - ஷாங்காய் கூட்டமைப்பில் பிரதமர் மோடி பேச்சு!
தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்க ஷாங்காய் கூட்டமைப்பு வழிவகை காண பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கியது. இதற்கு தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கினார்.
By : Thangavelu

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்றார். தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மூல காரணமே பயங்கரவாதம்தான். தற்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பயங்கரவாதம்தான் முக்கிய சவால் என்பதை நிரூபிப்பதாக உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சனைகளே தெற்கு ஆசியாவின் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
நாட்டில் சகிப்புத் தன்மையும், நிதானப்போக்கும் கொண்ட ஒரு அமைப்புகள் வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தெற்கு ஆசியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது அவசியம் ஆகும். நமது வட்டார இளைஞர்களுக்கு எளியை£ன எதிர்காலத்தை உறுதி செய்யவும், பயங்கரவாதத்தை முறியடிக்கவும் வேண்டும்.
அனைத்து மத்திய ஆசிய நாடுகளுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதி எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinakaran
Image Courtesy:ANI
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=705808