உயிரிழப்புகள் கவலையளிக்கிறது: உக்ரைன் அதிபரிடம் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!
By : Thangavelu
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த மூன்றாவது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
மேலும், உக்ரைன் தலைநகரான கிவ் ஐ ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் அங்கு இன்னும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முடிந்தவரையில் உக்ரைன் அரசு ரஷ்ய படைகளுடன் போராடி வருகிறது. மேலும் போரை நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இந்திய பிரதமர் மோடியை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி பேச்சு வார்த்தை நடத்தினார். இது பற்றிய தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அப்போது உக்ரைனில் தற்போது சிக்கித்தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உக்ரைன் உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருள் சேதம் வருத்தம் அளிக்கிறது என்று உக்ரைன் அதிபரிடம் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter