Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு கவுரவம் !! கேப்டன் விஜயகாந்த் புகழாரம்!!

பிரதமர் மோடியால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு கவுரவம் !! கேப்டன் விஜயகாந்த் புகழாரம்!!

பிரதமர் மோடியால் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு கவுரவம் !! கேப்டன் விஜயகாந்த் புகழாரம்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 10:47 AM GMT



ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் தனது சிறந்த நடவடிக்கைகள் மூலம் கவுரவப்படுத்தி பெருமைபடுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும், மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டைய கால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.


அதேபோல, இன்று காலையில் நடை பயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. ஒட்டு மொத்த உலகத் தமிழர்களையும் பெருமைபடுத்திவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி," என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Source:-Hindu Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News