Kathir News
Begin typing your search above and press return to search.

கவுகாத்தியில் ரூ.1,123 கோடியில் வடகிழக்கு இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை - அசத்தும் மோடி அரசு!

கவுகாத்தியில் ரூ.1,123 கோடியில் கட்டப்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனிய பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

கவுகாத்தியில் ரூ.1,123 கோடியில் வடகிழக்கு இந்தியாவின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை - அசத்தும் மோடி அரசு!

KarthigaBy : Karthiga

  |  15 April 2023 7:15 AM GMT

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பிரதமர் மோடி நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாநிலத்தின் புகழ்பெற்ற 'பிஹூ' பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு ரூபாய் 14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார் .இதில் ரூபாய் 1,123 கோடியில் கவுகாத்தியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை முக்கியமானது. வடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக கட்டப்பட்டுள்ள இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அசாம் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பெரும் வர பிரசாதமாக அமைந்துள்ளது.


இதைத்தவிர அசாமின் நல்பாரி, நகோன் கோக்ரஜார் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மருத்துவ கல்லூரிகளில் 24 இளங்கலை துறை மற்றும் 500 படுக்கை வசதி கொண்ட ஆஸ்பத்திரியும் அடங்கியுள்ளன. இதன் மூலம் மருத்துவ மாணவர் இடங்களின் எண்ணிக்கை 1500-ஆக அதிகரிக்கிறது. இதைத் தவிர ரூ. 546 கோடியில் கட்டப்பட்டுள்ள அசாம் மேம்பட்ட சுகாதார ஆய்வு நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் சுகாதார மற்றும் மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.


மேலும் 1.1 கோடி ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த காதுகள் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ வசதிகளை பயனாளிகள் பெற முடியும். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கவுகாத்தி ஹை கோர்ட்டின் பிளாட்டினம் ஜுபிலி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சாருசஜய் விளையாட்டு வளாகத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு 7,280 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார் . இதன் முக்கியமாக புதிய ரெயில்பாதைகள், இரட்டைப்பாதை , மின்மயமாக்கல் உட்பட 700 கி.மீ ரயில்வே உள்கட்டமைப்பு பணிகள் அடங்கியுள்ளன.


மேலும் நாம்ரப்பிள் அமைக்கப்பட்டு உள்ள அசாம் - பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 1,603 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மெத்தனால் உலையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 12.21 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டப்படும் பலாஷ்பாரி - சுவால் குச்சி பாலத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்த பாலம் ரூபாய் 3,200 கோடியில் கட்டப்படுகிறது. இதே போல ரூபாய் 124 கோடி செலவில் ஆசியாவின் மிகப் பழமையான அஹோம் அரங்க வளாகத்தை அழகுபடுத்தும் பணிக்கான அடிகளையும் பிரதமர் மோடி நாட்டினார் டெல்லி திரும்பினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News