Kathir News
Begin typing your search above and press return to search.

சீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி

இந்தியா சீனா இடையே கிழக்கு லடாக்கில் மூன்று ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்த வந்த போதிலும் சீனாவை சேர்ந்த சமூக வலைதள பயனாளர்களான 'நெட்டிசன்களால் ' பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

சீன நெட்டிசன்களால் புகழப்படும் பிரதமர் மோடி

KarthigaBy : Karthiga

  |  20 March 2023 6:00 AM GMT

அமெரிக்காவைச் சேர்ந்த 'தி டிப்ளோமட்' என்ற பத்திரிக்கையில் மு.சுன்ஷான் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது ?என்ற கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.சுன்ஷான் சீன சமூக வலைதளங்களை ஆய்வு செய்து பிரபலமானவர். சீனாவில் ட்விட்டரை போன்ற 'சினா வெய்போ' சமூக வலைதளத்தை 58 கோடியே 20 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பிரதமர் மோடியை 'மோடி லவோக் சியன்' என்று பட்டபெயரிட்டு சீன நெட்டிசன்கள் அழைத்து வருகிறார்கள். அதற்கு மோடி அழிவில்லாதவர் என்று பொருள் .


மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று நினைக்கிறார்கள். மோடி தலைமையிலான இந்தியா மற்ற நாடுகளிடையே சம அந்தஸ்தை பராமரித்து வருவதாகவும் சீன நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மோடி பின்பற்றும் கொள்கைகள் இந்தியாவின் முந்தைய கொள்கைகளில் இருந்து மாறுபட்டவர் என்பது அவர்களின் கருத்து. எனது 20 வருட சர்வதேச பத்திரிக்கை அனுபவத்தில் எந்த வெளிநாட்டு தலைவரையும் சீன நெட்டிசன்கள் பட்டப்பெயரிட்டு அழைப்பது மிகவும் அபூர்வம். மோடி அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று மு.சுன்ஷான் தெரிவித்துள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News