எண்ணெய், எரிவாயு உற்பத்தியில் முதலீட்டைப் பெற சர்வதேச நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
கோவாவில் சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தியாவில் எண்ணெய் , எரிவாயு உற்பத்தியில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
By : Karthiga
கோவா மாநிலம் பேதுல் நகரில் இந்திய எரிசக்தி வார கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி கோவா சென்றார். பேதுல் நகரில் அவர் 20 சர்வதேச நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளை அழைத்து பேசினார். எக்ஸான் மொபில், பி.பி கத்தார் ஏஜென்சி, பிரான்ஸ் நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின் போது நாட்டின் எரிசக்தி நிலவரம் குறித்தும் அதில் முதலீடு வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. எண்ணெய் எரிவாயு அகழாய்வு பணியிலும் உற்பத்தி பணியிலும் தனது அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டை வாய்ப்புகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். எண்ணெய், எரிவாயு இறக்குமதியை குறைக்க அவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
எனவே இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழாய்வு பணியிலும் உற்பத்தி பணியிலும் சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். பேதுல் நகரில் நடந்த இந்திய எரிசக்தி வார கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது இந்தியாவின் எரிசக்தி துறையில் முன் எப்போதும் இல்லாத முதலீடு வந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இயற்கை எரிவாயு விநியோக சங்கிலியில் 67 பில்லியன் டாலர் முதலீடு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI