நேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.!
நேபாளம், ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரை.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக நேபாள பிரதமர் கேபிஷர்மா மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை.
நேபாளம் பிரதமருடன் பேசியதை பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டார்: அதில் கொரோனா வைரஸ் தொற்றறை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி பேசினோம். இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நேபாள மக்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்தேன். கொரோனாவைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் நம்முடைய போரில் நேபால் மாநிலத்துடன் நாம் துணை நிற்க வேண்டும் என்றார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் ஜப்பான் பிரதமருடன் பேசியதை பதிவிட்டார்: என்னுடைய நண்பர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் கொரோனா வைரஸ் பற்றிய ஆலோசனை நடத்தினோம். இந்தியா, ஜப்பான் இடையிலான புதிய தொழில்நுட்பங்களையும, தீர்வுகளையும் உருவாக்க உதவும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றார்.