காஷ்மீர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் - ஜார்ஜ் ஹோல்டிங் அமெரிக்கா எம்.பி பாராட்டு.!
காஷ்மீர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார் - ஜார்ஜ் ஹோல்டிங் அமெரிக்கா எம்.பி பாராட்டு.!
By : Kathir Webdesk
குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் ஹோல்டிங் என்பவர்,பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை தேவையானதுதான். காஷ்மீரில் நிண்ட கால நிலைத்தன்மைக்கு அது உதவும். இந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும். காஷ்மீர் மாநிலத்தின் நிலையை மாற்றும் வகையிலும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிரிவினையை தூண்டும் செயலுக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய பார்லிமென்ட் சட்டம் ஏற்றப்பட்டது. சமீப காலம் வரையிலும் மாநிலத்தை, காஷ்மீர் சிறப்பு சட்டம் 370வது பிரிவு நிர்வகித்து வந்தது. அந்த சட்டத்தை, இந்திய அரசியல்சாசனம் தற்காலிகமாக தான் அங்கீகரித்தது. அரசியல் தொடர்பு உள்ளவர்களுக்கு சிறப்பு சட்டம் பலனை தந்தது. ஆனால், மக்களுக்கு பொருளாதார பலன்களை அளிக்கவில்லை.
மாநிலத்தை வளர்ச்சி பெற செய்வதா என்ற முடிவை மோடி அரசு எடுக்க வேண்டியிருந்தது. சிறந்த வாழ்க்கை வாழ காஷ்மீர் மக்களுக்கு உரிமை உள்ளது. காஷ்மீர் சூழ்நிலையை எதிர்கொள்ள பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். காஷ்மீர் நிலையை மாற்றும் மசோதா, இந்திய பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. இது, அங்கு சீர்திருத்தம் செய்ய வேண்டியதை காட்டுகிறது.
Translated Article From NEWSONAIR