Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் ட்வீட் தெறிக்கவிட்ட பிரதமர் மோடி!

தமிழில் ட்வீட் தெறிக்கவிட்ட பிரதமர் மோடி!

தமிழில் ட்வீட் தெறிக்கவிட்ட பிரதமர் மோடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Oct 2019 11:49 AM IST


சின்ன அதிபருடனான சந்திப்பு மகாபலிபுரத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமைச்சர்களும் உள்ளிட்டோர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.


சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி




https://twitter.com/narendramodi/status/1182536250227490816

Next Story
கதிர் தொகுப்பு
Trending News