Kathir News
Begin typing your search above and press return to search.

“பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி! கலக்கத்தில் பாகிஸ்தான்!!

“பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி! கலக்கத்தில் பாகிஸ்தான்!!

“பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி! கலக்கத்தில் பாகிஸ்தான்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Sep 2019 9:00 AM GMT



பிரதமர் நரேந்திர மோடி, 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அங்குள்ள ஹூஸ்டன் நகருக்கு சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஹவுடி மோடி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.


அப்போது அவர், “ஹவுடி மோடி அதாவது “மோடி நலமா” என்று என்னிடம் கேட்கிறீர்கள், இந்தியாவில் எல்லோரும் சௌக்கியம்” என்று தமிழில் சொன்னார். மேலும் 8 மொழிகளில் “எல்லோரும் சௌக்கியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியனார். அப்போது கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.


உரை நிகழ்த்திய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை அழைத்துக்கொண்டு இருவரும் கைகோர்த்தபடி அந்த மைதானத்தை வலம் வந்தனர். அப்போது மக்கள் ஆர்ப்பரித்தனர்.


உல பத்திரிகைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சியை பாராட்டி மகிந்தன. அமெர்க்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் இது, புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.


பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெர்ரெஸ் ஏற்பாடு செய்திருந்த உலக பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்தி்னார்.


அப்போது பிரதமர் மோடி, “பேசிக்கொண்டே இருந்தது போதும். இது செயல்படுவதற்கான நேரம். உலகம், வெப்ப மயம் ஆவதை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம்” என்று உலகிற்கு அறைகூவல் விடுத்தார்.


இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது ஹூஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவருக்கு மோடி நன்றி தெரிவித்தார்.



“பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார்” - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி! கலக்கத்தில் பாகிஸ்தான்!!


பின்னர் டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசும், “நானும் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறுகிய காலத்தில் புதிய உச்சத்தை எட்டும்” என்று கூறினார்.


இதைத்தொடர்ந்து “பாகிஸ்தானில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதை, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உறுதி செய்துள்ளாரே” என்று டிரம்பிடம் நிருபர்கள் கேட்டனர்.


அதற்கு பதில் கூறிய டிரம்ப், “பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார்” என்று மோடியைப் பார்த்து சிரித்தவாறு கூறினார்.


இதனால் பாகிஸ்தான் கலக்கம் அடைந்து உள்ளது. அங்குள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை வெளியேற்றவும் முடியாமல், மூடி மறைக்கவும் முடியாமல் திண்டாடி வருகிறது.


உலக நாடுகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மீதே பயங்கரவாதிகள் பாய்வார்கள் என்பது பாகிஸ்தானுக்கு நன்றாக தெரியும்.


வளர்த்த கடா மார்பில்தானே பாயும்?
எப்படியும், பாகிஸ்தானுக்கு அழிவுதான்!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News