பிரதமர் மோடியின் நிர்வாகம் சூப்பர்: அவருக்கு ஆதரவாக இருப்பேன் !! ரவீந்தரநாத் குமார் எம்.பி பேட்டி !!
பிரதமர் மோடியின் நிர்வாகம் சூப்பர்: அவருக்கு ஆதரவாக இருப்பேன் !! ரவீந்தரநாத் குமார் எம்.பி பேட்டி !!
By : Kathir Webdesk
பாரத பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் ஆதரவாக இருப்பேன் என்று எம்.பி ரவீந்தரநாத் குமார் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பிரதமர் மோடி இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் சிறப்பான நிர்வாகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் சிறப்பாக அமைந்து வருகிறது. சுதந்திர தின விழாவிற்கு பிறகு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் சிறப்பாக அமையும்.
அதிமுகவிலிருந்து தனி எம்.பியாக இருந்து வரும் பட்சத்தில் மற்ற மாநிலத்து எம்.பிக்கள் என்னிடம் சக நாடாளுமன்ற உறுப்பினராகவும் நண்பர்களாகவும் பழகி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் நாட்டின் உரிமைக்காகத்தான் தான் குரல் கொடுத்தேன். நாடாளுமன்ற கூட்டத்தின் போது முதுகெலும்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை. எனவே இது குறித்த கருத்தை என்னை விமர்சனம் செய்தவர்களிடமே கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பாரத பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் ஆதரவாக இருப்பேன். நீட் விவகாரத்தில் முன்பே கூறியது போன்று தமிழக அரசின் நிலைமை மற்றும் முதல்வர் அவர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்றும் கூறியுள்ளார் .