Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் கனவான காசநோயற்ற இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் உறுதி: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்!

உலகிற்கு முன்மாதிரியாக 2025- க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கனவான காசநோயற்ற இந்தியா 2025 ஆம் ஆண்டிற்குள் உறுதி: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்!
X

KarthigaBy : Karthiga

  |  20 Sep 2023 1:41 AM GMT

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடமாடும் காசநோய் ஒழிப்பு வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடந்தது. பிரதமர் மோடியின் கனவான காசநோயற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த வாகனத்தை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் பல்வேறு கிராமங்களுக்கு சென்று காசநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வழங்கி காசோலை ஒழிப்பு பணியில் ஈடுபடும்.


வாகன பயணத்தை தொடங்கி வைத்து பேசிய ஜிதேந்திர சிங் "2025 ஆம் ஆண்டிற்குள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக காசநோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும். இந்த இலக்கை அடைய பொதுமக்கள் தனியார் கூட்டு இயக்கம் அவசியம்" என்று அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News