Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடிக்கு கிடைத்த தனிப்பெரும் கவுரவம்: மோடி குறித்த மாஸ் தகவலால் அதிர வைத்த மாநிலங்களவை தலைவர்

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பிரதமர் மோடியை நான் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு கிடைத்த தனிப்பெரும் கவுரவம்: மோடி குறித்த மாஸ் தகவலால் அதிர வைத்த மாநிலங்களவை தலைவர்
X

KarthigaBy : Karthiga

  |  4 Aug 2023 9:00 AM GMT

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடிய போது பா.ஜனதா எம்.பி ராஜேந்திர அகர்வால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார். கேள்வி நேரம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி அமலியில் ஈடுபட்டனர். சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர் . பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறும் கேள்வி நேரத்தை நடத்த விடுமாறும் ராஜேந்திர அகர்வால் கேட்டுக் கொண்டார்.


அதற்கு பலன் இல்லை. இரண்டு கேள்விகள் மற்றும் துணை கேள்விகள் மட்டும் கேட்கப்பட்ட நிலையில் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியவுடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் பிரையன் சபை முடக்கத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அவை முன்னவரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயலின் கருத்தை சபைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டார். பியூஸ் கோயலும் ஒப்புக்கொண்டார்.


இதை அடுத்து பகல் ஒரு மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பகல் ஒரு மணி வரை சபையை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார். அதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கோபம் அடைந்த கார்கே சிறிய யோசனையை கூட உங்களால் ஏற்க முடியவில்லை. பிரதமரை சபைக்கு வர சொல்வதையும் ஏற்க மறுக்கிறீர்கள். பிரதமரை ஏன் பாதுகாக்கிறீர்கள் இது எனக்கு புரியவில்லை என்று கூறினார். அதைக் கேட்டு சபை தலைவர் ஜெகதீப் தன்கர் கோபமடைந்தார். அவர் கூறியதாவது


நான் யாரையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. நான் பாதுகாக்க வேண்டிய இடத்திலும் பிரதமர் இல்லை. வலதையோ, இடதையோ ஆதரிப்பது என் வேலை அல்ல. அரசியல் சட்டத்தையும் உங்கள் உரிமைகளையும் பாதுகாப்பது தான் என் வேலை. பிரதமர் மோடி உலக அளவில் அங்கீகாரம் பெற்றவர். அவரது தலைமையில் இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் முன்னேறி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையில் தனி பெரும்பான்மை கொண்ட ஆட்சிகள் அமைந்துள்ளன. அவரை நான் பாதுகாக்க தேவையில்லை.எனவே எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார் .


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News