விண்வெளி ஆய்வில் புதிய உயரங்களை இந்தியா தொடுவதற்கு பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்
2035 - ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு 2040 இல் நிலவுக்கு முதல் இந்தியரை அனுப்புவதற்கும் திட்டமிட்டு செயல்படுங்கள் என்று விஞ்ஞானிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
By : Karthiga
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தின் தயார் நிலை வருகிற 21-ஆம் தேதி இதற்கான முதலாவது சோதனை களத்தை ஏவும் நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
நமது சமீபத்திய விண்வெளி வெற்றிகளான சந்திரயான்-3, ஆதித்யா எல் ஒன் திட்டங்களின் அடிப்படையில் புதிய இலக்குகளை நோக்கி நாம் செயல்பட வேண்டும். அதன்படி 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளி நிலையம் ஆன பாரதிய அந்தரிஷா ஸ்டேஷனை அமைப்பதற்கும் 2040 ஆம் ஆண்டு முதல் இந்தியரை அனுப்புவதற்கும் விஞ்ஞானிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அதற்காக நில ஆய்வுக்கான வழிமுறையை விண்வெளித் துறை உருவாக்கும்.
அதில் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை ஏவு வாகனத்தை உருவாக்குதல், புதிய ஏவு தளத்தை கட்டுவது , மனிதர்களை மையமாகக் கொண்ட ஆய்வுகள் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். விண்வெளி துறையில் நமது திறன்கள் குறித்து நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். விண்வெளி ஆய்வில் புதிய உயரங்களை எட்டுவதில் நாடு உறுதியாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI