சிறுதானியங்கள் குறித்த பிரதமர் மோடியின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை!
பிரதமர் மோடி இயற்றிய சிறுதானியங்கள் குறித்த பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
By : Karthiga
சிறுதானியங்கள் குறித்து பிரதமர் மோடி இயற்றிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவின் பரிந்துரையை ஏற்று 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்தது. இது தொடர்ந்து சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 'அபன்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்கிற பாடல் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பாடலை மும்பையில் பிறந்த இந்திய அமெரிக்க பாடகரும் பாடல் ஆசிரியருமான பாலு எனும் பால்குனிஷா அவரது கணவர் கௌரவும் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழாவில் பேசிய பால்குனிஷா, "பாடலை பிரதமர் மோடி என்னுடன் இணைந்து எழுதியுள்ளார். இப்பாடலில் பிரதமர் மோடி சிறுதானியங்கள் குறித்து பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் 2024 -ஆம் ஆண்டிற்கான கிராமிய விருதுக்கு பிரதமர் மோடி எழுதிய பாடல் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த உலகளாவிய இசை என்கிற பிரிவினில் பாடல் விருதுக்கு போட்டியிடுகிறது. உலகம் முழுவதும் சிறந்த பாடல் ஆல்பம் இசையமைப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
SOURCE :Dinakaran