'யூ டியூப்' சேனலில் பிரதமர் மோடியின் சாதனை: சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2 கோடி - மோடியை பின்தொடர்வதில் மேலும் மேலும் ஆர்வம் காட்டும் மக்கள்!
பிரதமர் மோடியின் youtube சேனல் 2 கோடி சந்தாதாரர்களை பிடித்து சாதனை செய்துள்ளது.
By : Karthiga
நிறைய விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக வலைதளங்கள் மிகவும் அரும்பங்காற்றி வருகின்றது. அனைத்து விதமான தகவல்களையும் நொடிக்கு நொடி சுடச்சுட தெரிந்துகொள்ள அனைத்து மக்களுமே இப்பொழுது சமூக வலைதளங்களை தான் பயன்படுத்தி வருகிறார்கள். whatsapp , facebook, twitter youtube போன்ற பிரபலமான சமூக வலைதளங்கள் பல்வேறு பரிணாமங்கள் என் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்த்து வருகிறது.
பிரதமர் மோடி கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத் முதல் மந்திரியாக இருந்த போது பிரத்தியேகமாக யூடியூப் சேனல் ஒன்றை நிறுவினார். அதில் அவரது தனது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த youtube சேனலின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியானது. அவரது வீடியோக்கள் நான்கு புள்ளி ஐந்து பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதன் மூலம் மற்ற உலக தலைவர்களை விட பிரதமர் மோடி முதல் இடத்தை பெற்றுள்ளார்.
இதன்படி பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ சுமார் 64 லட்சம் சந்தாதாரர்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பார்வையின் அடிப்படையில் உக்கிரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 22.4 கோடியுடன் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 7.89 லட்சம் சந்தாதாரர்களும் துருக்கி அதிபர் ரேசன் எரடோகனுக்கு மூன்று புள்ளி ஒன்று 6 லட்சம் சந்தாதாரர்களும் உள்ளனர்.
பிரதமரின் யோகா வித் மோடி என்ற youtube சேனலும் 73 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சேனலுக்கு 35 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். மோடி பொது தொடர்புகளில் சமூக ஊடகங்களின் திறனை புரிந்து கொள்வதில் இந்திய அரசியலில் முன்னோடியாக கருதப்படுகிறார்.