அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் எனக்கூறி - காவல்நிலையத்தை அடித்து உடைத்த கிருஸ்துவ பாதிரியார்கள்!
அதானி துறைமுகத்திற்கு எதிராக வன்முறை ஏற்படுத்திய 50 பாதிரியார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து 50 பாதிரியார்கள் மீது கொலை சதி திட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகம் அருமைக்கும் பணிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு திருவனந்தபுரம் மாவட்ட லத்தின் கத்தோலிக்க சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சபை சேர்ந்த பாதிரியார்களும் போராட்டத்தில் நேரடியாக களமிறங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்தது துறைமுகத்தை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டு இருக்கிறார்கள். இரு தரப்பினரும் சரமாரியாக கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார போலீசார் உட்பட ஏராளமான காயமடைந்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக விழிஞ்ஞத்தில் போலீசார் திருவனந்தபுரம் மாவட்ட இடத்தின் கத்தோலிக்க சபை பிஷப் மீதும்,சுமார் 50 பாதிரியார்கள் மீதும் வழக்க பதிவு செய்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாதிரியார் கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டதால் தங்களுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், ஏற்கனவே அதானி குடும்பம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Dinakaran