குப்பை அள்ளுவதில் மாமூல்! குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்!
குப்பை அள்ளுவதில் மாமூல்! குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்!
By : Kathir Webdesk
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க வேட்பாளர் காத்தவராயன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க வின் கஸ்பா மூர்த்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். குடியாத்தம் தினசரி மார்க்கெட் சுங்க வசூலில் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் மீது அதிமுகவின் கஸ்பா மூர்த்தியால் புகார் தொடுக்கப்பட்டது இதே புகாரை மேலும் ஒருவர் தி.மு.க வின் எம்.எல்.ஏ மீது புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க வின் மூர்த்தி கூறுகையில் : தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் லாட்டரி சீட்டு, காட்டன் சூதாட்டம், பட்டாசுக் கடை, குப்பை வாருபவர்களை மிரட்டி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் மாமூல் வசூலிக்கிறார். இதை, நான் வாட்ஸ் அப்பில் பதிவிட்டேன்.
நான் பொய் சொல்லவில்லை. லாட்டரியை நடத்துவதே எம்.எல்.ஏ-வுக்கு வேண்டப்பட்டவர்தான். என்னை மிரட்டும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் விமர்சனம் செய்வதால் தி.மு.க எம்.எல்.ஏ மீது போலீஸில் புகார் அளித்திருக்கிறேன்’’ என்றார்.
இதே போல் குடியாத்தம் காய்கறி மார்க்கெட்டில் குப்பை அள்ள, மாமூல் கேட்பதாக, சமூக வளைதளங்களில், மூர்த்தி பொய்யான தகவல்களை பரப்பினார். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியாத்தம் நகர போலீசில், எம்.எல்.ஏ., காத்தவராயன் நேற்று புகார் அளித்தார்.