Begin typing your search above and press return to search.
கடத்தப்பட இருந்த 6 ஐம்பொன் சிலைகள் மீட்பு - எந்த கோவிலுக்கு சொந்தமானவை?
கும்பகோணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த பழங்கால சிலைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்
By : Mohan Raj
கும்பகோணத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த பழங்கால சிலைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்
சுவாமி மலையில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு கடத்தப்பட இருந்த 6 பழங்கால ஐம்பொன் சிலைகளை போலீசார் கைப்பற்றினார்.
திருவலஞ்சுழியில் இயங்கி வரும் ஸ்ரீ தர்ஷன் ஆர்ட் மெட்டல் என்ற சிற்பக்கூடத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்துவதற்காக இருந்த பழங்கால சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிலை தடுப்பு காவல் பிரியினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை இட்ட பொழுது நடராஜர், கிருஷ்ணர், விநாயகர், அம்மன் என ஆறு பழங்கால ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதனால் கடை உரிமையாளர் ராமலிங்கத்தை கைது செய்த போலீசார் சிலைகள் திருடப்பட்ட கோவில் மற்றும் அதனை தொன்மை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story