Kathir News
Begin typing your search above and press return to search.

25 கோடி மதிப்புள்ள 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை விற்க முயற்சித்த இருவரை மடக்கிய காவல் துறை

25 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சைக் கல் லிங்கம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது

25 கோடி மதிப்புள்ள 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை விற்க முயற்சித்த இருவரை மடக்கிய காவல் துறை
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 May 2022 5:28 PM IST

25 கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சைக் கல் லிங்கம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சைக் கல் லிங்கம் மற்றும் உலோக நாகாபரண நடத்த இருப்பதாக சிலை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அடிப்படையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சிலையை வாங்குவது போல் நாடகமாடி கடத்தல்காரர்களை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இந்த சிலையின் மதிப்பு 25 கோடி என தெரியாமல் சிலை கடத்தல்காரர்கள் போலீசாரிடம் பேரம் பேசியுள்ளனர், இந்த அந்த சிலைகள் அனைத்தும் கடத்தல் சிலைகள் என்பதை உறுதி செய்த போலீசார் உடனடியாக கடத்தல்காரர்களை கைது செய்து சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெள்ளவேடு புதுக் ஆரணியை சேர்ந்த பக்தவச்சலம் என்கின்ற பாலா மற்றும் புதுச்சத்திரம் கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் ஆகியோர் சிலையை வைக்க முயற்சித்தனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் மற்றும் உலோகத்தாலான நாகாபரணம் ஆகியவற்றை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சிலை மற்றும் நாகாபரணம் ஆகியவை 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News