பிரதமர் பற்றி தவறான பதிவு!நில மோசடி மன்னன் எட்வின் கிறிஸ்டோபரை தூக்கிய போலீஸ்
பிரதமர் பற்றி தவறான பதிவு!நில மோசடி மன்னன் எட்வின் கிறிஸ்டோபரை தூக்கிய போலீஸ்
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் மூவரையும் எட்வின் கிறிஸ்டோபர் சமூக வலைத்தளமான முகநூலில் தவறான வகையில் மீம்ஸ் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் சென்னை ஜெயபிரகாஷ் என்பவர் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார்.
இதன் பின் புகார் குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர், விசாரித்ததில் எட்வின் கிறிஸ்டோபர் தவறான தகவல் பரப்பி வந்ததும் இவர் மேல் ஏற்கனவே மோசடி வழக்கும் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
எட்வின் கிறிஸ்டோபறை தீவிரமாக தேடிய நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பல பேரிடம் பொய்யான நில பத்திரம் கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இதற்கு முன் இவர் மேல் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டு காவல் துறையினால் தேடப்பட்டு வந்தவர் முகநூலில் வழியே மாட்டி கொண்டார்